அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளதை வைத்து ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக-வின் திட்டத்தை முறியடிக்கவே இரு அணிகளும் இணைய முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படுகிறது.
சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதையடுத்து அச்சின்னம் முடக்கபட்டது.
இரு அணிகளின் பிரச்சனையை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது.
புகழ்பெற்ற இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிக இடங்களை நாம் கைப்பற்றி விடலாம் என திமுக கணக்கு போடுகிறது.
இதற்காக தான் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்தும்படி திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது
மேலும் சசிகலா அணியின் 20 எம்.ஏல்.களுடன் திமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அப்படி அவர்கள் திமுக பக்கம் வந்தால் ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் பொது தேர்தல் வரும்.
இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில் அதிமுகவின் இரு அணியாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
இதை பயன்படுத்தி 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றலாம் என திமுக நினைக்கிறது. இதையறிந்த மத்திய பா.ஜ.க அரசு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு, அ.தி.மு.க., அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது.
கட்சி ஒன்றான பின்னர் அதிமுகவுடன் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க அக்கட்சி நினைக்கிறது
இதை ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணியினரும் தெரிந்து கொண்டதால் தான் திமுக சதியை முறியடிக்க கட்சியை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.