நாட்டுக்கு நாடு என்று அல்லாமல் ஒரே நாட்டுக்குள்ளேயும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அனேகமானவர்கள் தமது தாய் மொழியை மட்டுமே அறிந்திருப்பதனால் ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படும் பிரதேசங்களுக்கு செல்லும்போது தொடர்பாடல் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்.
இப்பிரச்சினைக்கு தீர்வாக மொழிமாற்றிச் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Travis எனப்படும் இச் சாதனமானது சிறிய அளவில் காணப்படுவதுடன் நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் (Real Time Translator ) செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இச் சாதனம் தற்போது 550,000 டொலர் நிதியை திரட்டுவதற்காக Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை உலகளவில் 7 பில்லியன் வரையான மக்கள் வாழ்ந்துவருவதோடு, அவர்கள் 6,500 வகையான மொழிகளை பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.