அமெரிக்காவில், ‘கிஸ் எஃப்.எம்.’ என்ற வானொலி நடத்திய வித்தியாசமான போட்டியொன்றில் இலங்கைப் பெண்ணொருவர் வெற்றிபெற்றதுடன், சொகுசு கார் ஒன்றைத் தனதாக்கிக்கொண்டார்.
கிஸ் எஃப்.எம். மற்றும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான கியா என்பன இணைந்து இந்தப் போட்டியை நடத்தியது. கியாவின் ‘ஒப்டிமா’ என்ற புதிய ரக கார் வெளியீட்டை ஒட்டியே இந்தப் போட்டி நடைபெற்றது. வாயை எடுக்காமல் நீண்ட நேரம் காரை முத்தமிட வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை.
இதன்படி இருபது பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக, அதாவது ஐம்பது மணி நேரம் இந்தப் போட்டி தொடர்ந்தது. இருபது பேரில் பதின்மூன்று பேர் போட்டியிலிருந்து பின்வாங்கினர். எஞ்சிய ஏழு பேரும் விடாப்பிடியாக காரை முத்தமிட்டபடியே இருந்ததால், குலுக்கல் முறையில் வெற்றியாளரைத் தெரிவுசெய்யத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கையைச் சேர்ந்த திலினி ஜயசூரிய என்பவர் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு கியா ஒப்டிமா கார் பரிசாக வழங்கப்பட்டது.