இனி வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.
வடகொரியா இதுவரை ஐந்து முறை அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
வடகொரியாவை எச்சரிக்கும் விதத்தில் தனது கடற்படை அணியை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்தது.
இதனால் போர் உண்டாகும் பதற்றமான சூழல் உருவான நிலையில் இருதினங்களுக்கு முன்னர் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா அதில் தோல்வியடைந்தது.
இந்த ஏவுகணை சோதனைக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹான் சாங் அளித்துள்ள பேட்டியில், இனி வாரந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் ஏவுகணை பரிசோதனை நடத்தவுள்ளோம்.
எங்கள் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது போராக மாறும் என எச்சரித்துள்ளார்.
எங்களை அவர்கள் தாக்க நினைத்தால் அவர்களுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி தருவோம் எனவும் ஹான் கூறியுள்ளார்.