அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்து மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறியதாவது, அதிமுகவின் இரு அணிகளும் கருத்து வேறுபாடின்றி செயல்படுவோம்.
மக்களும், தொண்டர்களும் சில காரணங்களுக்காக தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, அதிமுகவில் இருந்து தினகரன் விலகியது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் எதுவும் இப்போது இல்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து செயல்படுவார்.
அதிமுக புதிய பொதுச்செயலாளர் யார் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள். பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்படு குறித்து தேர்வு செய்யப்படும் குழு முடிவு எடுக்கும். குழு முடிவெடுத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தப்படும் என கூறியுள்ளார்.