மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று நாடு திரும்பும் இலங்கைப் பெண்களுக்கு பிரதி சுங்கப் பணிப்பாளர் ஓர் முக்கிய அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதன்படி இலங்கைக்கு வரும் பெண்களுக்கு பிறர் கொடுத்து அனுப்பும் பொருட்களை கொண்டுவருவது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இது குறித்து பணிப்பெண்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது.
நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
10 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காகவே கேகாலை பகுதியைச் சேர்ந்த இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத்திலுள்ள தரகர் ஒருவர் போலியான விபரங்களை வழங்கி அவரிடம் சிகரட் பை ஒன்றை கொடுத்து அனுப்பியுள்ளார்.
எனினும் அந்தப் பெண் சிகரட் பற்றிய விபரங்களை அறிந்திருக்கவில்லை என தெரியவருகின்றது.
இதனால் பிறர் கொடுத்து அனுப்பும் பொதிகள் குறித்து அவதானமாக செயற்படுங்கள்.
இவ்வாறாக இலங்கைப் பெண்கள் ஏமாறாமல் இருப்பதற்கு அவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.