யு.எஸ்.சுங்க அதிகாரிகள் ஒரு போலி வெடி பொருள் சாதனத்தின் படத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயணி ஒருவரின் சூட்கேசிற்குள் இருந்து இச்சாதனம் பறிமுதல் செய்யப்ட்டதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சாதனம் பற்றறிகள், சுற்று வளையம், வயரிங் மற்றும் ஒரு டிஜிட்டல் முகம் கொண்டுள்ளது. இதன் படத்தை யு.எஸ்.சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ருவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர்.
இச்சாதனம் அமெரிக்க மனிதர் ஒருவரின்-ஜோசப் கலாஸ்கா என்பவரின் சூட்கேசிற்குள் இருந்து கைப்பற்றப்பட்டது. இவர் ரொறொன்ரோவிலிருந்து சிக்காகோ செல்லும் விமானத்தில் ஏப்ரல் மாதம் 6ந்திகதி புறப்பட இருந்தார்.
பீல் பிராந்திய பொலிசின் வெடி பொருள் அகற்றும் அலகு வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் வெடிக்க கூடிய ஒன்றல்ல போலியானதென தெரியவந்தது.
இருந்த போதிலும் யு.எஸ் அதிகாரிகள் விமானம் பயணிகள் மற்றும் பொதிகள் அனைத்தையும் சோதனை செய்தனர்.
இதன்காரணமாக விமானம் நான்கு மணித்தியாலங்கள் தாமதப்படுத்தப்பட்டது. அதிக பயணிகள் அவர்களது இணைப்பு விமானங்களை தவற விட்டனர்.
கலாஸ்காவின் மனைவி தொலைக்காட்சி நிலையத்தில் இச்சம்பவம் ஒரு தவறான புரிந்து கொள்ளல் என தெரிவித்துள்ளார்.
சாதனம் வீட்டில் செய்யப்பட்ட ஒரு அலாம் மணிக்கூடு எனவும் போலி குண்டல்ல எனவும் தெரிவித்தார். அனைத்தும் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.