பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பம் மீண்டும் ஒரு முக்கிய சர்வதேச பத்திரிகையின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ட்ரூடொ, அவரது மனைவி ஷோபி ஜோஜியா மற்றும் அவரகளது மகன் சேவியர் மூவரும் பரிசின் சமீபத்திய சர்வதேச பதிப்பான Paris Match முகப்பை அலங்கரித்துள்ளனர்.
சமீபத்திய சனிக்கிழமை பதிப்பின் ஆறு பக்கங்கள் இவர்களின் விமி றிட்ஜ் போரின் 100வது ஆண்டு வைபவத்திற்காக அண்மையில் மேற்கொண்ட பிரான்ஸ் பயணத்தின் ஆவணங்களுடன் முகப்பையும் அலங்கரித்து வெளிவந்துள்ளது.
10,000ற்கும் மேற்பட்ட கனடிய துருப்புக்கள் குறித்த போரில் காயப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ உள்ளனர்.முதல் தடவையாக கனடாவின் நான்கு பிரிவுகளும் போரில் ஈடுபட்டு றிட்ஜை முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனியிடமிருந்து கைப்பற்றினர்.
பத்திரிகை படங்கள் யுனோ பீச்சில் இடம்பெற்ற விமி ஞாபகார்த்தத்தில் எடுக்கப்பட்டவை. இரண்டாம் உலக போரின் போது-யூன் 6, 1944 அன்று-கனடியரின் தரையிறங்கும் புள்ளியாக விழங்கியது யுனோ பீச்சாகும்.
பிரான்ஸ் நாட்டின் செய்தி பத்திரிக்கையான பரிஸ் மச்சின் வாராந்த சுழற்சி கிட்டத்தட்ட 600,000 ஆகும்.