ரொறொன்ரோ- சனிக்கிழமை வாகன தரிப்பிடத்தில் 24வயதுடைய மனிதர் ஒருவர் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்காபுரோ சுற்றுவட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த மரணம் குறித்து அனைவரும் துக்கம் அடைந்துள்ளனர்.
விக்டோரியா பார்க் மற்றும் விஞ்ச் அவெனியு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு பயமுறுத்தல் இல்லை என பொலிசார் நம்புகின்றனர். பாதிக்கப்பட்டவரே இலக்கு வைக்கப்பட்டதாகவும் நம்ப படுகின்றது.
சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் அழைப்பை ஏற்று செஸ்டர் லி புளுவாட்டிற்கு அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் சென்றடைந்த சமயம் பாதிக்கப்பட்டவர் இறந்து விட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகாலை 1.30-மணி அளவில் இறந்தவர் இருவரை வாகன தரிப்பிடத்தில் சந்தித்துள்ளார். அச்சமயம் சுடப்பட்டுள்ளார்.சந்தேக நபர்கள் பின்னர் ஓடிவிட்டனர்.
துப்பாக்கி சூடு குறித்து குடியிருப்பாளர்கள் 911அழைக்க அங்கு வந்த பொலிசார் தேடியதில் பகல் வெளிச்சம் வரும் வரை உடலை கண்டுபிடிக்க முடியவில்லை என கொலைக்குற்ற அலகின் துப்பறியும் அதிகாரி ஜேசன் சங்கரன் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் வசிக்கும் ஒருவரால் பாதிக்கப்பட்டவர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இதே பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்பது குறித்து பொலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
நண்பர்கள் குடும்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இறந்தவர் ஒரு சிறந்த நண்பர் என நிதுன் சந்திரகுமார் என்பவர் தெரிவித்தார்.
இறந்தவரின் பெயரை குடும்பத்தினர் உறவினர்களிற்கு தெரியப்படுத்தும் வரை வெளியிட விரும்பவில்லை.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது ஒரு எச்சரிக்கை-அழைப்பு என அவர்கள் அச்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் எந்த சிக்கல்களிலும் இதுவரை ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.