இத்தாலி நாட்டைச் சேர்ந்த மிக வயதான மூதாட்டி என்று கருதப்படும் எம்மா மோரானோ மரணமடைந்துள்ளார்.
கடந்த 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி வடக்கு இத்தாலியின் வெர்பானியா எனும் இடத்தில் பிறந்தவர் எம்மா மோரானோ.
மோரானோ இருமுறை திருமணம் புரிந்துள்ளார். இரண்டாவது திருமணத்தில் பிறந்த மகன் இறந்தப் பிறகு தனது கொடுமைக்காரக் கணவனை அவர் பிரிந்தார்.
அதன் பின்னர் முழு நேர வேலை பார்த்து வந்த மோரானோ தமது முதுமையை பெரும்பாலும் படுக்கையிலேயே கழித்துள்ளார்.
கடந்த ஆண்டு தனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடடிய அவர், தன்னுடைய ஆயுள் நீட்டிப்பிற்கு குறித்து கூறுகையில்,
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும், சில பிஸ்கட்டுகளுமே காரணம் என்று கூறினார். உலகின் மிக வயதான நபர் எனும் கின்னஸ் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், அவர் தனித்துவம்மிக்க வாழ்க்கையைக் கொண்டிருந்தார். வாழ்வில் துன்பத்திற்கிடையேயும் முன்னேறிச் செல்வதற்குரிய வலிமையை அவரிடமிருந்து அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுவரை உலகில் அதிக வயதுடையவராக வாழ்ந்து வந்தவர் பிரெஞ்சு நாட்டின் ஜீன்னே கால்மெண்ட் எனும் மூதாட்டியே என்று கூறப்படுகிறது.
அவர் 122 வருடம் வாழ்ந்து 1997 ஆம் ஆண்டில் மறைந்தார் என கூறப்படுகிறது.