ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டண சேவைகளின் தொடக்கமாக அறிவிக்கப்பட்ட ஜியோ ப்ரைம் சந்தாவில் சேருவதற்கான வாய்ப்பு இன்று இரவு 11.59 மணியுடன் நிறைவுறுகிறது.
கடந்த செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக இலவச இன்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கி வந்தது.
இந்த இலவச சேவைகளை தொடர்ந்து கட்டண சேவைகளை வழங்குவதற்கான ஜியோ ப்ரைம் சந்தாவில் சேருவதற்கு கூடுதல் அவகாசமாக 15 நாட்கள் வழங்கப்பட்டது. அந்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று இலவச சேவைகள் நிறைவடைவதால் நாளை முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தே பயன்படுத்த இயலும்.
ரிலையன்ஸ் ஜியோ வின் டண் டணா டண் திட்டத்தின் படி ப்ரைம் திட்டத்தில் சேருவதற்கு ரூ.99 ரீசார்ஜ் செய்யவேண்டும். ரூ.408(99 303) க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு 84ஜிபி-யானது(தினசரி 1ஜிபி) வழங்கப்படும்.
இதே போன்று ரூ.509 திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி(தினசரி 2ஜிபி) மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ப்ரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு கட்டணமானது ரூ.408 முதல் ரூ. 608 விலையில் திட்டங்கள் துவங்குகிறது. இவையும் முறையே 1ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டாவினை வழங்குகிறது.
ஏற்கனவே ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு இதில் எந்த மாற்றமும் இல்லை.
ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசங்கள் தொடரும். ஜீலை முதல் இதற்கான கட்டண முறை தொடங்கும்.
வாய்ஸ் கால்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதே போன்று அனைத்து கால்களுக்கு ரோமிங் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதனால் இந்தியா முழுதும் வாய்ஸ் கால்களுக்கு ரோமிங் கட்டணங்கள் இல்லை.
இனி ஜியோவில் 1ஜிபி மற்றும் 2ஜிபி என்ற டேட்டா அளவினையே பெற முடியும். ரூ.999 க்கு ரீசார்ஜ் செய்து அன் லிமிடெட் டேட்டாவினை பெற இயலாது.