அவுஸ்திரேலிய 19 வயதுக்குற்பட்டோர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குற்பட்டோர் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
Hobart நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக Sumanasinghe 42 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் pope 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 49வது ஓவர் முடிவில் 214 ஓட்டங்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது.
6 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை பந்து வீச்சாளர் டேனியல் கடைசி ஓவரை வீச, அவுஸ்திரேலிய வீரர் pope துடுப்பெடுத்தாடினார்.முதல் பந்தில் ஓட்டங்கள் எடுக்காத நிலையில், இரண்டாவது பந்தில் pope போல்டாகி வெளியேறினார்.
49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலிய அணி 214 ஓட்டங்கள் எடுத்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் Uppal, Sutherland அரை சதம் அடித்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாது ஒரு நாள் போட்டி ஏப்ரல் 18ம் திகதி Hobart மைதானத்தில் நடைபெறவுள்ளது.