கியுபெக்கின் முதலாவது Jordan ruling கொலை வழக்கு!

கடந்த வாரம் மொன்றியலை சேர்ந்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் கொலை குற்றத்திற்காக நாடு கடத்தப்பட தீர்ப்பளிக்கப்பட்டார்.ஆனால் இவர் நாடுகடத்தல் குறைந்தது ஒரு மாதத்திற்காவது காவலில் தடுத்து வைக்கப்படுவார் என அறியப்படுகின்றது.
கொலை குற்ற சாட்டுடன் 31-வயதுடைய தனபாலசிங்கம் தங்க வைக்கப்பட்டுள்ள முதலாவது கியுபெக்கை சேர்ந்தவராவார். Jordan ruling -கடந்த யூலை மாதம் உச்ச நீதி மன்றம் ஒன்று அறிவித்த முடிவு-விசாரனைக்கு வரும் வரை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் காத்திருத்தல்.
வியாழக்கிழமை இடம்பெற்ற தடுத்து வைத்தல் பரிசீலனையில் குடிவரவு மற்றும் அகதிகள் சபை அங்கத்தவரான Stéphane Morin,  சிறி லங்காவை சேர்ந்த தனபாலசிங்கம் ஒரு விமான அபாயம் மற்றும் கனடிய சமூகத்திற்கும் ஆபத்தான ஒருவர் என முடிவு செய்தார்.
2004ல் அகதியாக கனடா வந்தவர் 31 வயதுடைய தனபாலசிங்கம். கொலை குற்றச்சாட்டிலிருந்து அதிகார பூர்வமாக விடுவிக்கப்படுவதற்கு முன்னராக கனடா எல்லை புற சேவைகள் ஏஜன்சி இவரை கைது செய்தது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவரை இவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து தனபாலசிங்கம் மேன்முறையீடு செய்தாலும் ஆண்டுகள் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
இவர் நாடுகடத்தல் ஆணையை எதிர்த்து மேன்முறையீடு செய்கையில் இவரது சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவரின் கவனத்தில் விடுதலை செய்யுமாறு இவரின் வழக்கறிஞர் Vic Artinian வாதாடிய போதிலும் மொரின் மறுத்து விட்டார்
தனபாலசிங்கம் வீட்டு குற்றம் செய்த காரணத்திற்காக 2012-ல் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார்.
வியாழக்கிழமை இடம்பெற்ற தடுப்பு காவல் ஆய்வு விசாரனையின் போது தனபாலசிங்கத்தின் மறைந்த மனைவிதான் பிரச்சனைக்குரியவர் கணவர் குறித்து அடிக்கடி பொலிசாரை அழைப்பார் என தனபாலசிங்கத்தின் மைத்துனி தெரிவித்தார்.
தனபாலசிங்கம் அவரது 21-வயதுடைய மனைவி அனுஜா பாஸ்கரன் என்பவரை கொலை செய்தார் என இரண்டாம் டிகிரி கொலை குற்றம் சாட்டப்பட்டு 2012ல் கைதாகி விசாரனையின்றி 56மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். இது கிட்டத்தட்ட ஒரு இரட்டை உச்சவரம்பு தொகுப்பாகும். இதனை 2016-ல் உச்ச நிதிமன்ற தீர்ப்பொன்று Jordan decision என குறிப்பிட்டது.
நாடு கடத்தல் நிபந்தனைக்கு இணங்காததால் விமான ஆபத்தானவர் என்றும் கடந்த காலங்களில் வீட்டு குற்றச்செயல்கள் புரிந்த பதிவுகள் இருப்பதால் சமூகத்திற்கும் ஒரு ஆபத்தானவர் என சபை தெரிவித்துள்ளது.
இவரது மனைவி பல தடவைகள் பொலிசாரை அழைத்து தனபாலசிங்கம் தன்னை அடிக்கின்றார் என புகார் தெரிவித்துள்ளதாக மொரின் கூறினார்.
2011-ல் அனுஷா பாஸ்கரனை திருமணம் செய்தார்.
2012 -ஜனவரியில் இரண்டாவது தடவையாக இல்லற வன்முறைக்காக கைது செய்யப்பட்டார்.ஆயுதத்தால் தாக்கினார் என குற்றம் சாட்டப்பட்டது.
2012- மே மாதம் நிபந்தனை மீறி மீண்டும் தாக்குதல் செய்த காரணத்தால் கைதானார்.
மூன்று மாதங்களின் பின்னர் மனைவி இறந்து விட்டார்.
மத்திய அரசின் சட்டபிரகாரம் தனபாலசிங்கம் மற்றொரு தடுப்பு காவல் ஆய்வு விசாரனை 30-நாட்களின் பின்னர் மே 11 2017ல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

siva1siva

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News