ஒன்ராறியோ-ஓக்வில் பகுதியில் இடம்பெற்ற சோதனை ஒன்றில் பதினாறு நாய்கள் கைப்பற்றப்பட்டன. இவைகள் ஓக்விலில் ஒரு சட்டவிரோத இனப்பெருக்க மையத்தில் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர். இத்துடன் சட்ட விரோதமான பல துப்பாக்கிகள், மற்றும் 60,000டொலர்கள் பெறுமதியான போதை மருந்துகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு மனிதர்கள் மற்றும் ஒரு வாலிப பையன் ஆகியோர் இந்த சோதனையில் குற்றங்களை எதிர்நோக்குகின்றனரொ ஹால்ரன் பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு ரிவால்வர்கள், ஒரு சொட்கன், ஒரு றைவில், இரண்டு சைலன்சர்கள், வெடி மருந்துகள் மற்றும் இரண்டு டிசர்கள் புலன்விசாரனையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டன.
அத்துடன் 60,000டொலர்கள் பெறுமதியான கொக்கெயின், கெரொயின், மெதப்பெரைமன் மற்றும் மரியுவானா அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
நாய்களை அகற்றுவதற்கு ஓக்வில்SPCA வரவழைக்கப்பட்டது.
மில்ரன் ஒன்ராறியோவை சேர்ந்த முறையே 23மற்றும் 24 வயதுடைய இரு மனிதர்கள் மிசிசாகாவை சேர்ந்த 17வயதுடைய வாலிபன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.