தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் மீது பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அதிகாரிகளை மிரட்டியதாக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது வருமானவரித்துறை தரப்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இவர்கள் அனைவர் மீதும் சென்னை அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேவைப்பட்டால் அமைச்சர்களை கைது செய்து விசாரிக்கவும் பொலிஸ் முடிவு செய்துள்ளது.