ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க தடை செய்யப்பட்ட ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான Invitation To Tender for media rights -க்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை அணி இரு முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டமும், ராஜஸ்தான் அணியும் ஒரு முறையும் வென்றுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், புனே மற்றும் குஜராத் அணிகள் உருவாகின.
கலைக்கப்பட்ட அணி வீரர்களில் பெரும்பாலோனோர் நடப்புத் தொடரில் இந்த அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
சென்னை அணியின் தலைவரான டோனி தற்போது புனே அணிக்காக விளையாடி வருகிறார்.
சென்னை அணி ஐ..பி.எல். போட்டியில் பங்கேற்கும்பட்சத்தில் தோனி சென்னை அணிக்கு திரும்புவார். புனே, குஜராத் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
அண்மையில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன், 2018-ஆம் ஆண்டு டோனி தலைமையில் சென்னை அணி புதிய உத்வேகத்துடன் களம் இறங்கும் என கூறியிருந்தார்.
அதனால், சென்னை அணிக்கு மீண்டும் டோனி தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
மேலும் புனே அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி சமீபத்தில் நீக்கப்பட்டார். அந்த அணியின் உரிமையாளர் ஹர்ஸ் கோயங்கா, தோனியை நடத்தும்விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ரசிகர்கள் சிலர் டோனியை அவர் அசிங்கப்படுத்துவதாக சமூகவலைத்தளங்களில் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கு டோனியின் மனைவியான சாக் ஷி-யும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் தன்னை அசிங்கப்படுத்திய புனே அணியை விட்டு டோனி விலகி சென்னை அணிக்கு மீண்டும் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.