ஆர்.கே.நகரில் வாக்குக்குப் பணம் கொடுத்த தினகரன் தரப்பை கையும்களவுமாகப் பிடிக்க, அமைச்சர் விஜயபாஸ்கரைக் போட்டுக்கொடுத்தது யார் என்பது குறித்த தகவலை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு என்ன செய்துகொண்டிருக்கிறது என தினமும் வருமான வரித்துறைக்கு சொல்லிக் கொண்டிருப்பவர் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத் தான்.
வருமானவரித்துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒரு மாநில அரசின் அதிகாரிக்கு அவர் தகவல் சொல்வார். அந்த மாநில அரசு அதிகாரி, வருமான வரித்துறைக்கு சொல்வார்.
4ம் திகதி நள்ளிரவு ஓட்டுக்கு 4,000 ரூபாய், பரிசுப்பொருட்கள் என தினகரன் அணி பண விநியோகம் செய்தது. அதை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.
இப்படி தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் முப்பது பண விநியோக வீடியோக்களை எடுத்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதில் பெரும்பாலானவை தினகரன் தரப்புக்குரியவை. வருமானவரித்துறையினரும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் பண விநியோகத்தின் அபாயகரமான போக்கை தங்கள் தலைமைக்கும் தெரிவித்தனர். இதனையடுத்தே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என கூறியுள்ளார்.