கார்டினர் கடுகதி பாதை கிழக்கு பகுதி டவுன்ரவுனில் இன்று காலை முதல் ஒரு பாரிய நீண்ட-கால சரிவு பாதை மூடப்படுவதை தெரிவிக்கும் சில குறிப்புக்களை வாகன சாரதிகள் கவனிக்க கூடியதாக இருக்கும்.
அடுத்த வாரம் முதல் 2018 ஜனவரி வரை ரொறொன்ரோ கார்டினர் கடுகதி சரிவு யோர்க், பே மற்றும் யங் பாதைகளை மூடுதல் மற்றும் மாற்றீடு செய்கின்றது.
இன்று முதல் சாரதிகள் லேக் ஷோர் புளுவாட் கிழக்கிலிருந்து கார்டினர் கடுகதிவழி சரிவு பாதை ஸ்படைனா வரை அணுக கூடிதாக இருக்கும்.
யோர்க்-பே-யங் சரிவு பாதை ஏப்ரல் 17 அதிகாலை ஐந்து மணிக்கு நிரந்தரமாக மூடப்படும்.
ஜேம்சன் அவெனியு, ஸ்படைனா அவெனியு மற்றும் யாவிஸ் வீதி சரிவு பாதைகளை பாவித்து டவுன்ரவுன் மையத்தை அணுக முடியும் என கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
கார்டினர் மற்றும் லேக் ஷோர் புளுவாட் மேற்கு பகுதி சார்ந்த பாதைகள் இந்த கட்டுமான திட்டத்தினால் பாதிக்கப்படமாட்டாது.
வாகன சாரதிகள் தாமதங்களை எதிர் நோக்க நேரிடும் அதற்கேற்ப பாதைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.