சுவீடன் நாட்டில் பொதுமக்கள் கூட்டத்திற்குள் லொறியை ஏற்றி 4 பேரை கொன்ற சம்வத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவீடன் தலைநகரான Stockholm-ல் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் ஓட்டி வந்த லொறி திடீரென புகுந்தது. இச்சம்பவத்தால், 4 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதலாக கூட இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இத்தாக்குதலில் இறந்த நான்கு பேரில் ஒருவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்றும் மீதம் இருவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் ஐந்து பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தாக்குதலுக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் 15 பேர் காயமடைந்ததில் 4 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.