யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்தோடிவிட்ட நிலையிலும் இன்றும் (சிங்கள) மக்களிடையே அதனை நினைவு படுத்தும் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.
யுத்த காலத்தில் எப்படி விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்பது குறித்து இராணுவத்தினர் மக்களிடையே விபரிக்கும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
குறித்த காணொளியில் யுத்தம் பற்றியும், இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இராணுவ வீரர் ஒருவர் விபரிக்கின்றார். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
மேலும் அவர் அதில் கூறியுள்ளதாவது,
ஆணையிறவு தாக்குதலின் போது 2800 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அது இலங்கை யுத்த வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்.
விடுதலைப்புலிகள் குண்டு தாக்காத வகையில் தமது வாகனத்தை செய்து இருந்தார்கள். அதன் மூலம் தொடர்ந்து முன்னேறி வந்து இராணுவ வீரர்களை கொன்று குவித்தார்கள்.
தற்கொலை தாக்குதல் பலவற்றையும் புலிகள் மேற்கொண்டார்கள். அவர்களுடன் யுத்தம் செய்து உயிர்த் தியாகங்களை செய்து நாட்டிற்கு சேவை செய்தவர்கள் இராணுவ வீரர்கள்.
ஆனால் உங்களுக்கு யுத்த மனநிலை குறித்து பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தலதா மாளிகைக்கு தாக்குதல் மேற்கொண்டு அழித்தபோதே நாடு முழுவதற்கும் புலிகள் பற்றி தெரிய வந்தது.
இராணுவத்தில் சேர்ந்த தமது பிள்ளைகளை காணவில்லை என பூஜை வழிபாடுகளை தாய்மார்கள் தலதா மாளிகையில் இன்றும் மேற்கொள்ளுகின்றார்கள்.
யுத்தத்தில் இறந்த படை வீரர்கள் அனைவரது உடல்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது இல்லை. இப்போது கூட காடுகளுக்கு நாம் செல்லும் போது எழுப்புக் கூடுகள் எமக்கு கிடைக்கின்றன. அவை இறந்த படை வீரர்களுடையது.
விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் யுத்தம் செய்து காத்தவர்கள் நாம். இன்று எழும்புக்கூடுகளாக கிடைக்கின்றனர், போரில் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர்.
சிறந்ததொரு இராணுவம், நாட்டுக்காக உழைக்கும் இராணுவ வீரர்கள் உள்ளார்கள். ஆகவே வெளிநாடுகளில் இருந்து எதிரிகள் யாரும் இனி வருவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.
செனல் 4 போன்றவற்றைப் பார்த்து மீண்டும் எதிகள் வந்தாலோ அல்லது விடுதலைப்புலிகள் நாட்டுக்குள் வந்தாலோ உங்களை காக்க நாம் இருக்கின்றோம். எனவும் அந்த வீரர் பொது மக்களிடம் தெரிவிக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் விடுதலைப்புலிகள் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
மீண்டும் புலிகள் வந்தால் காப்போம் என அவர் பொது மக்களிடம் தெரிவிப்பதற்கு காரணம் என்ன? மீண்டும் புலிகள் தாக்குவார்கள் என எச்சரிக்கை செய்கின்றார்களா?
போன்ற கேள்விகள் இந்த காணொளியின் காரணமாக எழுப்பப்பட்டுள்ளதான தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவது சாத்தியமற்றது. எப்போதும் மக்களை பீதியில் வைப்பதற்காக இப்படி செய்யப்படுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை அரசிற்கு எதிரானவர்கள் விடுதலைப்புலிகள் மீண்டும் வருகிறார்கள் என தெரிவித்து வருகின்ற போதும் இராணுவ உயர் மட்டங்கள் அதனை மறுத்து வருகின்றதோடு, நாட்டின் பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இராணுவ வீரர்கள் மக்களிடம் இவ்வாறான கருத்துகளைப் பரப்பி வருவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும், அரசு இது தொடர்பில் கவனம் செலுத்துமா? எனவும் குறிப்பிடப்படுகின்றது.