இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் பர்னீஷ், `ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார்.
அதர்வா தற்போது ‘செம போதை ஆகாதே’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.