கனடாவின் தொழிலாளர் சந்தை கடந்த மாதம் 19,400 மேலதிக வேலை வாய்ப்புக்களால் உந்தப்பட்டுள்ளது–இவற்றில் பெரும்பாலானவை முழு-நேர வேலை வாய்ப்புக்களாகும்.
எனினும் கனடாவின் புள்ளிவிபரவியல் கணிப்பு புதிய பதவிகளில் பெரும்பாலானவை நிலையற்ற வகைகளிற்குள் அடங்குபவைகளாக காணப்படுகின்றன. சுய-வேலை வாய்ப்பு-குடும்ப வர்த்தகத்திற்காக சம்பளம் இன்றி வேலை செய்யும்வகைகளிற்குள் அடங்குகின்றன.
கடந்த மாதம் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களில் 95-சத விகிதமானவை முழு நேர வேலைகள் எனவும் 95-சதவிகிதமானவை சுய-வேலை வாய்ப்பு பதவிகள் என அறிக்கை கண்டுள்ளது.
நாட்டின் வேலையின்மை விகிதம் மார்ச்சில் 6.6லிருந்து 6.7 விகிதமாக உயர்ந்துள்ளது. அதிகமான மக்கள் வேலை தேடுவதனால் இந்த உயர்வு என ஏஜன்சி கூறுகின்றது.
முன்னய ஆண்டுடன் ஒப்பிடும் போது முழு-நேர மற்றும் பகுதி-நேர வேலை வாய்ப்புக்கள் 1.5சதவிகதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த மாதம் கனடா உற்பத்தி மற்றும் உருவாக்கம் சேவைகளில் 2,400 பதவிகளை இழந்துள்ளது. ஆனால் 21,800 தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புக்கள் புதிதாக ஏற்பட்டுள்ளன. 2002-லிருந்து உற்பத்தி துறை வேலைவாய்ப்புக்கள் மாதா மாதம் அதிகரித்து வருவதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
உற்பத்தி துறை வேலைவாய்ப்புக்கள் 24,400 அதிகரித்துள்ளன–பெரும்பாலானவை ஒன்ராறியோவில் மற்றும் குறைந்த அளவு அல்பேர்ட்டாவில்.
ஆனாலும் 2000 ஆரம்பத்தின் உச்ச கட்டத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி துறையில் 630,000 குறைவான வேலைகள்-27சதவிகித வீழ்ச்சி என கனடா புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில அல்பேர்ட்டா ஒட்டு மொத்த உயர்ந்த அளவிலான வேலை வாய்ப்பு அதிகரிப்பை காட்டுகின்றது. கடந்த மாதம் 20,700 முழு-நேர வேலை வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் கியுபெக் 17,800 முழு-நேர வேலைகளை இழந்துள்ளது.