சம காலத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் அதிகரித்த பாவனை காரணமாக முன்னணி நிறுவனங்கள் வினைத்திறன் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றன.
இப்போட்டியில் தற்போது Xiaomi நிறுவனமும் இணைந்துள்ளது.
இதன்படி Xiaomi Mi 6 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
5.1 அங்குல அளவுடையதும், 1920×1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 2.4GHz வேகத்தில் செயல்படக்கூடிய Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியானது கூகுளின் Android 7.1.1 Nougat இயங்குதளத்தில் செயல்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.