யு.எஸ்.சுங்க அதிகாரிகள் யுனைரெட் விமான சேவை விமானம் ஒன்றை பியர்சன் சர்வதேச விமான நிலைய ஒடு தளத்தில் வியாழக்கிழமை காலை தடுத்து வைத்தனர்.சாத்தியமான பாதுகாப்பு விதிகளை மீறியதால் தடுத்து வைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யுனைரெட் விமான சேவை விமானம் 547 காலை 7 மணிக்கு சிக்காகோ நோக்கி புறப்பட இருந்தது. எனினும் பயணிகள் மூன்று மணித்தியாலங்களிற்கும் மேலாக விமானத்திற்குள் விடப்பட்டிருந்தனர்.
பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி தனிமை படுத்தப்பட்ட ஒரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களது பொதிகளை பெற்று பின்னர் சுங்க அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக பயணி Joe Sturonas என்பவர் கூறினார். அதன் பின்னர் அவர்கள் கனடிய சுங்கம், பாதுகாப்பு மற்றும் பின்னர் மீண்டும் அமெரிக்க சுங்கம் ஊடாக செல்ல வேண்டும் எனவும் பயணி தெரிவித்தார்.
இந்நிலைமை பொது பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காதெனவும் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட மாட்டாதெனவும் பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.