ரொறொன்ரோ–ஒன்ராறியோவின் சிறுவர் பராமரிப்பு திட்டத்திற்கு உட்சபட்ச கண்காணிப்பை ஏற்படுத்திய ஒரு இரண்டு வயது சிறுமியின் மரணம் குறித்த வழக்கு செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. ரொறொன்ரோ வடக்கு பகுதியில் அமைந்துள்ள தின பராமரிப்பு நிலையம் ஒன்றிற்கு வெளியே கொதிக்கும் எஸ்யுவி வாகனம் ஒன்றிற்குள் கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலங்கள் வரை விடப்பட்டு பின்னர் அவளது உயிரற்ற உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
வாஹன், ஒன்ராறியோவில் அமைந்துள்ள குறிப்பிட்ட பராமரிப்பு நிலையத்தின் சொந்தகாரரான ஒலெனா பன்விலோவா மீது குற்றவியல் அலட்சியம் மரணத்திற்கு காரணமாக அமைந்ததென குற்றம் சாட்டப்பட்டது. எவா றவிகொவிச்சின் உயிரை பறித்த இச்சம்பவம் நான்கு ஆண்டுகளின் பின்னர் முடிவிற்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட நடத்துநர் மீது சட்ட விரோதமாக பராமரிப்பு நிலையம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இவரது கணவர் மற்றும் பருவ வயது மகள் இருவர் மீதும் சட்ட விரோத பராமரிப்பு குற்றம் சுமத்தப்பட்டது. மூவருக்கும் கடந்த வருடம் 30 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது- சிறைத்தண்டனை வார இறுதி நாட்களில் இடைவிட்டு அனுபவிக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரும் ஆளுக்கு 150,00டொலர்கள் அபராதமாக செலத்த வேண்டும்.
பென்விலோவா கிரிமினல் அலட்சிய குற்றத்திற்கான சிறைத்தண்டனையை மே 19 எதிர்கொள்வார்.
எவாவின் பெற்றோர் பராமரிப்பு நிலைய நடாத்துநர்கள் மற்றும் கல்வி அமைச்சிற்கெதிராக உரிமை கோரிக்கை வழக்கு தொடர தீர்மானத்துள்ளனர்.
சட்ட விரோதமான பராமரிப்பு நிலையம் என தெரிந்தும் சரியான நடவடிக்கையை அல்லது மூடவோ அமைச்சு முயலவில்லை என பற்றிக் பிறவுன் மின்அஞசல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த பராமரிப்பு நிலையம் பிரபல்யம் மிக்க ஒன்றாகும்.முக்கியமாக ரஷ்ய மொழி பேசும் பெற்றோர் மற்றய இடங்களில் பல டொலர்களை செலவழிக்காது குறைந்த செலவில் பெற விரும்பினர்.
2013 யூலை காலை 9.30மணியளவில் பராமரிப்பு நிலையத்திற்கு சென்ற பன்விலொவா பயணிகள் பக்கத்தில் இருந்த பிள்ளைகளை இறக்கியுள்ளார். ஆனால் எவாவை மறந்து விட்டார். சாரதி பக்கத்தில் உள்ள இருக்கையில் உள்ள கார் இருக்கையில் அகப்பட்டு கொண்டாள்.
மாலை ஐந்து மணிவரை எவா சூடான வாகனத்திற்குள் அகப்பட்டு கொண்டுவிட்டாள் என்பதை உணரவில்லை. வாகனத்திற்குள் வெப்பம் பகல் நேரம் குறைந்தது 50 C ஆக இருந்திருக்கும்.
சிறுமி வெப்ப பக்கவாதத்தால் இறந்துவிட்டாள்.
சிறுமியின் மரணத்தின் பின்னர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டு விட்டது.