இலங்கை அரசங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதன் ஊடாகவே தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சர்வதேச மன்னிப்பு சபையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னி ப்பு சபை செயலாளர் தலைமையிலான குழுவினர் இன்று காலை வடமாகா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைஅவருடைய இல்லத்தில் சந்தித் து கலந்துரையாடிய போதே முதலமைச்சர் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமற்போனோர் விவகாரம் குறித்து பதில் கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான் போராடாட்டங்களை பொது மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற மக்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்து மேற்படி குழுவினர் பேசியிருக்கின்றார்.
இதற்கமைய பலவிடயங்களையும் அறிந்து வைத்துத் தான் எங்களுடன் மேலதிக விடயங்கள் தொடர்பில் பேசினார்கள்.
எங்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முடியுமான வகையில் பல தடவைகள் தெரிவித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம். ஆனாலும் இதற்கான தீர்வுகள் என்பது எட்டப்படாமலேயே இருக்கின்றன.
இந்நிலையில் வெளிநாட்டு அரசாங்கங்களும் இவர்களைப் போன்ற அதாவது சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களைக் கொடுத்தால் தான் எதையுமே செய்ய முடியும்.
அந்த அடிப்படையில் தான் நீங்கள் தொடர்ந்து இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டுமென்று கூறியிருந்தேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.