தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது ஆஜராகிய வைகோ, பிணையில் செல்ல விருப்பமில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
வைகோ பரபரப்பு பேட்டி
சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பாக வைகோ அளித்த பேட்டியில், என்னை கைதை கண்டித்து மதிமுக மாவட்ட செயலாளர் உட்பட கட்சி முன்னணியினர் யாரும் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது.
சிறையில் வந்தும் என்னை யாரும் சந்திக்க வேண்டாம், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் கோர முகம் குறித்து நமது இளைஞர்களுக்கு முழுமையாக தெரியவில்லை.
இதுகுறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்துள்ளார்.