ரொறொன்ரோ மற்றும் வன்கூவர்இரண்டு நகரங்களில் எதுவும் வீடொன்றை வாங்குவதற்கு இலகுவானவை அல்ல. ஆனால் கனடியர்களிற்கு வாடகை விலை மோசமானதாக அமைகின்றது.
இன்று ரொறொன்ரோ 1990லிருந்து அதன் மோசமான செலவிடும் நிலைமைகளை காண்கின்றது என அறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடொன்றின் சராசரி விலை கடந்த மாதம் $875,983ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு கடந்த வருடம் இதே மாதத்தை விட 27.7சதவிகிதம் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதே நேரம் வன்கூவரில் வீட்டு நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் முதல் தடவையாக இந்த முன்னேற்றம் காணப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வருமானத்தின் 84.8சதவிகிதம் வீட்டு செலவுகளாக காணப்பட்டுள்ளது–கனடாவில் எங்குமில்லாத அளவு மோசமான செலவிடும் தன்மை என நகரம் பதிவு செய்யப்பட்ட எட்டு மாதங்களின் பின்னர்–என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோவிலும் சரி வன்கூவரிலும் சரி வாழ்க்கை இலகுவானதல்ல என்பதில் கேள்விக்கிடமில்லை.
கனடா பூராகவும் ஒரு அப்பார்ட்மென்டை வாடகைக்கு பெறக்கூடிய அதிக மற்றும் குறைந்த விலை கொண்ட முதல் 10 நகரங்களை றியல் எஸ்டேட் பட்டியல் தளம் வெளியிட்டுள்ளது.
யெலோநைவ், நோர்த் வெஸ்ட ரெரரோறிஸ்- வாடகைக்கு பெற மிக விலைமதிப்புள்ள நகரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளநிலை அப்பார்ட்மென்ட் ஒன்றின் சராசரி விலை மாதம் 1,159 டொலர்களாகும்.
வன்கூவரில் இளநிலை குடியிருப்பு ஒன்றின் மாத வாடகை 1,013டொலர்கள் என CMHC தரவு வெளிப்படுத்தியுள்ளது.ரொறொன்ரோவில் 957டொலர்கள்.
ரொறொன்ரோவும் வன்கூவரும் 3-படுக்கை அறைகள் கொண்ட தொடர்மாடிக்குடியிருப்பின் வாடகை நிலையில் ஆறாவதும் ஏழாவதும் தரத்தில் நிற்கின்றன.
வன்கூவரில் காலியிட விகிதம் 0.7ஆக உள்ளது. ரொறொன்ரோவில் 2.8ஆக காணப்படுகின்றது.
கியுபெக்கில் ஷாவினிகன் என்ற இடத்தில் இளநிலை அப்பார்ட்மென்ட் ஒன்றின் மாத வாடகை 344 டொலர்கள்.