பிரித்தானியாவில் அணு உலை மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலை அடுத்து நாடு முழுமையும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
பிரித்தானிய பாதுகாப்பு சேவை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் அடுத்த 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பார்வை இம்முறை அணு உலை மற்றும் விமான் நிலையங்கள் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது மட்டுமின்றி கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு அல்லது வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்புகள் மடிக்கணனி அல்லது மொபைல் வாயிலாக விமான நிலைய பாதுகாப்பு வளையத்தை கடந்து குறித்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி வெளிநாட்டு உளவாளிகள் அல்லது ஹேக்கர் குழுவினர் பிரித்தானிய அணு உலை பாதுகாப்பு வளையத்தை தகர்த்து நாசகர வேலையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர்.
அமைச்சர் Jesse Norman இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், அணு உலைகளை இணைய தாக்குதலில் இருந்து பாதுகாப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இணையம் வழி தாக்குதலை முறியடிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.9 பில்லியன் பவுண்டு செலவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் தெரிவித்துள்ளார்.