தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று பரபரப்பாக நடந்து முடிந்தது. விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டது. இன்று காலை துவங்கிய வாக்கெடுப்புகள் மாலை 4.15 மணியுடன் முடிவடைந்தது.
1059 வாக்குகள் பதிவானதில் விஷால் 362 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.
பெற்றி பெற்றதும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இன்னும் 2 வருடங்களில் வரலாறு காணாத அளவில் தயாரிப்பாளர் சங்கம் வளர்ச்சி பெறும்.
திருட்டு விசிடி பற்றி கூறுகையில், தேர்தலுக்கு முன்னர் கூறியது போல் எதிரிகள் தயாராக இருங்கள். விரைவில் ஒழித்துக்கட்டுவோம் என்று அதிரடியாக கூறினார்.