ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சில்க் சுமிதா. இவரை போல இன்னும் கவர்ச்சியில் பெயர் வாங்க ஒரு நடிகையும் பிறக்கவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது 1996ல் சில பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.
இதனிடையே விஜயலட்சுமி என்ற அவரது இயற்பெயரில் சென்னை தியாகராய நகரில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு ஆதார் கார்டு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.