நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பலருக்கும் செல்லப்பிள்ளை. மற்றவர்களை சிரிக்க வைக்கும் இவரது திறமையே இவரை பலரும் ரசிக்க காரணம்.
இவரது தொடர் ஹிட்டால் தற்போது அவருக்கு மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்துவருகிறார்.
பிரபல டிவியில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் திவ்ய தர்ஷினி. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் பேய் போல வந்த ஒருவர் பயமுறுத்த சிவா அலறிவிட்டார்.
ஆனாலும் வழக்கம் போல தனது பாணியில் அட Conjuring ஏ என சொன்னது எல்லோரையும் சிரிக்கவைத்தது.