சாலைகளை கிழித்தெறியும் ஓட்டுநர்களினால் ஏற்படும் மோசமான விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அல்பேர்ட்டா வோட் மக்முரோயை சேர்ந்த 3-வயது பையன் ஒருவன் அறிந்து கொண்டான்;.
இவனிற்கு கிடைத்த தண்டனை? சலவை அறையில் அவனது தாய்க்கு சில கடுமையான நேரத்தை செலவிட வேண்டும் என்பதாகும்.
நேத்தன் சிநோ விளையாட்டு மைதானம் ஒன்றில் இருந்து வீடு நோக்கி வாகனம் ஒன்றில் வந்து கொண்டிருந்தான். ஞாயிற்றுகிழமை இரவு தனது வோர்ட் மினியேச்சர் F-150ல் வந்து கொண்டிருக்கையில் ஆர்சிஎம்பியினரால் தடுக்கப்பட்டான்.
அதிகாரி சிறுவனிற்கு ஒரு இளம் சிவப்பு நிற சட்ட மீறல் ரிக்கெட் ஒன்றை வழங்கினார். “Too Fast!”என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்கள் மகனின் முதல் ஓட்டும் மீறலிற்கு அவனது பெற்றோர்கள் முதல்-கை சாட்சியங்களாவர்.
தாங்கள் மகனை விட அதிக உற்சாகமாக இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் கடுமையான அணுகு முறை தங்களை சிரிக்க வைத்ததென தெரிவித்தனர்.
தாங்கள் நடந்து கொண்டிருக்கையில் அதிகாரிகள் தங்களை தாண்டி சென்று உங்கள் மகனை அவனது டிரக்கிலிருந்து இறக்கினால் உங்களிற்கு ஆட்சேபனை இருக்குமா என கேட்டுள்ளனர்.
அவன் வளர்ந்த பின்னர் இச்சம்பவம் இவனிற்கு ஒரு பெரிய கதையாக இருக்கும் என அவர்கள் நம்பினர்.
பொலிசாருடனான இத்தொடர்பை அவனது தந்தை வீடியோவில் பதிவு செய்தார்.
ay