லெமிங்டன், ஒன்ராறியோ–ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஒன்று பறவைகள் பார்வையாளர்களிற்கு பெயர் போனது.லேக் எரி கரையின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவின் ஒரு பகுதி தீப்பிடித்துள்ளது. மழை பெய்ததாலும் தீயணைப்பு அதிகாரிகளின் முயற்சியாலும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தீயினால் பூங்காவின் 125 ஹெக்டர்கள் தீக்கிரையாகியுள்ளது.
வசந்த காலத்தில் இந்த பூங்கா புலம் பெயரும் பாடும் பறவைகளிற்கு ஒரு நிறுத்தும் புள்ளியாகவும் முன் பனிக்காலத்தில் மொனாக் பட்டாம் பூச்சிகள் நிறைந்து காணப்படும் எனவும் கூறப்படும் இப்பூங்கா மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
தீபகற்பத்தில் அமைந்துள்ள சதுப்பு தாழ்நிலத்தின் ஈர நிலம் கனடாவின் தென்பகுதியில்அமைந்துள்ளது என கனடா பூங்காக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 100வருடங்களிற்கு மேலாக 347 இன பறவைகள் பதிவாகியுள்ளன. இது மட்டுமன்றி 700-பூக்கும் மரங்களினதும் பூக்காத மரங்களினதும் வீடாக விளங்குகின்றது.