ரொறொன்ரோ சிஐபிசி நிதித்துறை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் 130 பேர்களை பணிநீக்கம் செய்து அவர்களிற்கு பதிலாக இந்திய பணியாளர்களை பணிக்கமர்த்துகின்றது.
பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக தங்கள் பதவிகளை இழக்கும் ஊழியர்கள் மற்றய உள் ஊர் சிஐபிசி ஊழியர்களிற்கு பயிற்சி அளிக்க வேண்டும். அந்த ஊழியர்கள் பின்னர் பணியை ஏற்கும் இந்திய ஊழியர்களிற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தங்களின் இடங்களை நிரப்புபவர்களிற்கு இவர்கள் நேரடியாக பயிற்சி அளிக்க மாட்டார்கள். இந்த நிலைமை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலரை பொறுத்த வரையில் நன்றாக இல்லை எனவும் கூறப்படுகின்றது. தங்களது தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுகொண்டுள்ளதாகவும் தாங்கள் அஞ்சுவதே காரணம் எனவும் அறியப்படுகின்றது.
இந்நிலை மிக மிக அழுத்தம் நிறைந்ததாக உள்ளதென ஊழியர் ஒருவர் தெரிவித்தார். தனக்காக இன்னுமொரு நாட்டவரை பணிக்கமர்த்தும் ஒருவருக்கு தனது அறிவை வழங்க வேண்டிய நிலைமை மனச்சோர்வை ஏற்படுத்துகின்றதென தெரிவித்தார்.
எங்களை குறித்து எவரும் கவலைப்படவில்லை என நினைக்க தோன்றுகின்றதென மற்றுமொரு ஊழியர் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலை மோசமாக உள்ளது எனவும் சிலர் கருதுகின்றனர்.
அயலாக்கம் செய்யப்பட்ட பணிகள் முக்கியமாக கணக்கு பதிவியல் சம்பந்தப்பட்ட பதவிகளாகும். சிஐபிசி ஏற்கனவே சில ஊழியர்களை போக அனுமதித்து விட்டது. இந்த வேலை நீக்கம் ஓராண்டு காலத்திற்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊழியர்கள் வங்கி இலாபமீட்டுவதில் ஆர்வமாக உள்ளது ஆனால் தங்களிற்கு உதவுவதில் இல்லை என சிபிசி செய்தியில் பேசிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலாண்டில் சிஐபிசி 1.4பில்லியன் டொலர்கள் இலாபமீட்டியது.
இது 24-மணித்தியாலங்கள் மலிவான உழைப்பு.அது மட்டுமன்றி நாங்கள் தூங்கும் போது அவர்கள் வேலை செய்வார்கள் என தெரிவித்தனர்.
சிஐபிசியில் தற்சமயம் 43000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.கனடாவில் கடந்த ஐந்து வருடங்களில் 2500 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.