மனிதன் தனது வளர்ச்சிக்கு என கண்டுபிடிக்கும் பொருட்களே இன்று பெரும் ஆபத்தை விளைவிப்பனவாக மாறிவருகின்றன.
இவற்றுள் முக்கியமாக திகழ்வது e-waste எனப்படும் இலத்திரனியல் கழிவுகள் ஆகும்.
உலக நாடுகள் எங்கிலும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் பாவனைக் காலம் முடிந்ததும் அவற்றினை அப்புறப்படுத்திவிடுவார்கள்.
எனினும் அழிவடையாத இக் கழிவுகள் எரிக்கப்படும்போது அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுப் பதார்த்தங்கள் காரணமாக சூழல் மாசடைதல் உட்பட மரணங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு இலத்திரனியல் கழிவுகளை முற்றாக அழிப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது இலத்திரனியல் கழிவுகளை நனோ துகள்களாக மாற்றுவதன் மூலம் அழிவடையச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த முறையின் ஊடாக அடுத்த வருடத்தில் சுமார் 50 மில்லியன் மெட்ரிக் தொன் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.