ஒட்டாவா-கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி கனடாவின் மேற்கு பகுதிகளில் றொபின் கூட் பிரான்ட் மாவை மீள அழைத்துள்ளது. இம்மாவில் இ.கோலி நுண்ணுயிரி கலந்திருக்கும் என கருதப்படுவதன் காரணமாக இந்த மீள அழைப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஸ்மக்கர் உணவுகள் கனடா காப்ரேசனின் றொபின் கூட் அனைத்து-தேவை மாவின் 10-கிலோகிராம் பைகள் ஏப்ரல் 17, 2018ற்கு முன்னர் சிறந்ததென திகதியிடப்பட்டவை மீள அழைக்கப்பட்டுள்ளதென ஏஜன்சி தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கற்சுவான் மற்றும் மனிரோபா பகுதிகளில் இந்த மா விற்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள அழைக்கப்பட்ட தயாரிப்புக்கள் வெளியே எறியப்பட வேண்டும் அல்லது வாங்கிய கடைகளில் திரும்ப கொடுக்கப் பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இ.கோலி கலந்த உணவு பொருட்கள் பழுதடைந்ததாக அல்லது மணக்க தெரியாதெனவும் ஆனால் அவை நோயை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.
நோய்க்கான அறிகுறிகளாக வாந்தி, குமட்டல், கடுமையான வயிற்று பிடிப்புக்கள், மற்றும் இரத்தம் கலந்த நீர்த்தன்மையான வயிற்று போக்குகள் போன்றன காணப்படும்.
சிலருக்கு பக்கவாதம் வலிப்பு இரத்தம் ஏற்றுதல் போன்ற கடுமையான பாதிப்புக்களும் சிலருக்கு ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.