பெண்ணை காட்சி பொருளாகவும், கவர்ச்சி உருவமாகவும் பார்க்கும் உலகில் பெண்ணால் சாதிக்க முடியும் என சொல்வதற்கு உதாரணமாக சிலரும் இருக்கிறார்கள்.
சினிமா திரையுலகில் சில முக்கிய நடிகைகளாக இருந்தவர்கள் இன்றும் சாதித்து வருகிறார்கள். அவர்களை பற்றிய சில விஷயங்களை பார்க்கலாமே..
ரேவதி
தன்னுடைய தனி நடிப்புக்கே தனித்து அடையாளம் காணப்பட்டவர் ரேவதி. பாரதிராஜா சினிமாவிற்கு காட்டிய புது முகங்களில் இதுவும் ஒன்று. மாடர்ன் பெண்ணாக இவர் நடித்தாலும் பலரும் விரும்பியது என்னவோ கிராமத்து கேரக்டரில் தான்.
மலையாள நடிகையாக இருந்தாலு இவர் அதிகமாக நடித்தது தமிழ் சினிமாவில் தான். நடிகையாக மட்டுமில்லாமல் My friend, Red Building Where the Sun Sets ena இவர் எடுத்த ஆங்கில படத்திற்காக Best Feature Film விருதை வாங்கியுள்ளார்.
மேலும் குஷ்பூ, ஸ்ரீ தேவி, தபு, கஜோல் ஆகியோருக்கு படங்களில் குரல் கொடுத்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார்.
சுஹாசினி மணிரத்னம்
கணவரே ஒரு பயங்கரமான இயக்குனர். அவரின் மனைவி எப்படி இருப்பார் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
பிரபல நட்சத்திரங்களோடு நடித்த சுஹாசினி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இந்திரா என்னும் படத்தின் இயக்குனராக இருந்தாலும் ராவணன், இருவர், திருடா திருடா போன்ற படங்களுக்கு டயலாக் எழுதியுள்ளார்.
ஹீரோக்களுடன் கைகோர்த்து ஜோடியாக ஆடியது மட்டுமில்லாமல், இவர் 2 படங்களுக்கு கேமிரா அசிஸ்டண்ட்டாகவும் இருந்துள்ளார்.
ராதிகா சரத்குமார்
கலைக்குடும்பத்தின் பின்னனியில் இருந்த வந்த ராதிகா நடித்த தமிழ் படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வது போல இவரின் சாதனைகளும் நீண்டு கொண்டே செல்கிறது.
கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதி ராஜாவால் அடையாளம் காட்டப்பட்ட இவர் இன்னும் தொடர்ந்து நடித்து கொண்டே இருக்கிறார்.
இன்று பிரபல தொலைக்காட்சியில் இவரின் நாடங்கள் தான் மிகவும் ஹைலைட். கடைசியாக இவர் தங்க மகன் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர்கள் மூவர் தான் ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்கள். ரஜினி, கமல், கார்த்திக், முரளி போன்ற நடிகர்களோடும் கைகோர்த்தார்கள்.
பெண் சினிமாவில் நடிகையாகத்தான் சாதிக்க வேண்டும் என்பதல்ல. தயாரிப்பாளர், இயக்குனர் என சினிமாவின் எந்த ஒரு அங்கமாகவும் சாதனை செய்யல்லாம் என செய்துகாட்டிய இவர்களை போன்ற அனைவருக்கும் சினிஉலகத்தின் மகளிர் தின வாழ்த்துக்கள்.