தமிழில் கெடாவெட்டு கணக்காக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ‘ஈட்டி’ ரவி அரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவரோடு நடிக்க ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியனிடம் கேட்டிருக்கிறார்கள்.
ஏனோ தெரியவில்லை. கால்ஷீட் தேதிகள் சரிவராது என்று காரணம் கூறி பிரகாஷோடு நடிக்க மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘சாட்டை’ மகிமாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ‘குற்றம் 23’ படத்தில் பேரழகாக வெளிப்பட்டதைத் தொடர்ந்து மகிமாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிகிறதாம்.