இலங்கை மண்ணில் பல்வேறு சாதனைகளை தனதாக்கும் வங்கதேசம்
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வங்கதேச அணியானது பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன்படி கடந்த போட்டியில் இலங்கை அணியை 90 ஓட்டங்களால் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றிவாகை சூடியது.
குறித்த போட்டியானது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தொடர் அமைந்திருக்கின்ற நிலையில், முதல் தடவையாக இலங்கை அணியை சொந்த நாட்டில் வைத்து வங்கதேச அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், இன்றைய போட்டியில் இறுதி பந்து பரிமாற்றத்தில் வங்கதேச வீரர் டஸ்கின் அகமட் ஹெட்ரிக் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இவ்வாறு இலங்கை அணியுடனான தொடரை வென்று இலகுவாக 2019 ஆம் ஆண்டு சம்பியன் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுக்கொள்வதற்காக வங்கதேச அணி போராடிவருகின்றது.
மேலும், இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வி அடையும் பட்சத்தில் சம்பியன் கிண்ண போட்டியின் தகுதிக்காண போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலையில் இலங்கை தள்ளப்படும் எனபதும் குறிப்பிடத்தக்கது.