கடும் துயரத்தில் சூரியின் குடும்பம்
தன் காமெடியால் ரசிகர்களை சிரிக்கவைத்த நடிகர் சூரி இன்று துயரத்தில் ஆழ்ந்துள்ளார். அவரின் தந்தை முத்துசாமி இன்று இரவு 10.15 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
75 வயதாகும் அவரின் தந்தை மதுரையில் உள்ள ராசாக்கூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மறைவு சூரிக்கு கடும் துயரத்தை தந்துள்ளது.
அவரின் இறுதி ஊர்வலம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.