தினமும் ஒன்ராறியோவில் 25-வயதிற்குட்பட்ட யாராவது சுடப்படுகின்றனர்-இவற்றில் 75சத விகித துப்பாக்கி வன்முறைகள் தற்செயலாக ஏற்படுகின்றன என கனடிய வைத்தியர்கள் புதிய ஆய்வொன்றில் எச்சரிக்கின்றனர்.
2008 முதல் 2012ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 25வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் துப்பாக்கி வன்முறை குறித்த சிறுவர் வைத்தியசாலை டாக்டர்கள் மற்றும் மருத்தவ மதிப்பீடு மற்றம் அறிவியல் நிறுவனத்தவர்கள் வருடமொன்றிற்கு 355 துப்பாக்கி காயங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளது.
துப்பாக்கி காயங்களின் எண்ணிக்கை-தினமும் ஒரு பிள்ளை அல்லது ஒரு இளைஞர் காயமடைகின்றனர்-தங்களை அதிர்ச்சிக்குள்ளாகியதென தெரிவித்;துள்ளனர்.
பிரச்சனையின் அளவு குறித்த இந்த முதலாவது ஆய்வு பிரச்சனையின் அளவை வெளிப்படுத்தகின்றது என ஆய்வின் தலைமை எழுத்தாளர் டாக்டர் நற்றாசா சான்டர்ஸ் தெரிவித்தார்.
நான்கு மில்லியன் பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 355துப்பாக்கி காயங்கள் ஏற்படுகின்றன எனவும் கிட்டத்தட்ட 23 முதல் 25வரையிலான இளைஞர்கள் காயங்களினால் இறக்கின்றனர்.