கனடாவில் பெறுமதியான தங்க நாணயம் திருட்டு!

றோயல் கனடிய மின்டினால் வெளியிடப்பட்ட எண்ணற்ற தங்க நாணயம் ஜேர்மனி மியுசியத்திலிருந்து திருடப்பட்டு விட்டது.

திருடர்கள் ஜேர்மன் தலைநகரின் போட் மியுசியத்தை திங்கள்கிழமை உடைத்து நுழைந்து 100-கிலோ கிராம் எடையுள்ள- மில்லியன் டொலர்கள் பெறமதியா தங்க நாணயத்தை  களவாடி விட்டதாக பேர்லின் பொலிசார்தெரிவித்துள்ளனர்.

“Big Maple Leaf” நாணயம் 3-சென்ரி மீற்றர்கள் தடிப்பு 53-சென்ரி மீற்றர்கள் குறுக்களவையும் கொண்டவை. பிரிட்டிஷ் இளவரசியின் படத்தை முகப்பில் கொண்டவை. உலகில் மிக பெரிய நாணய சேர்க்கைகள் எனவும் 2010-லிருந்து அதன் நாணயவியல் சேகரிப்பில் கடனாக இருந்த வருகின்றது என அதன் வலைத்தளத்தில் கூறப்படுகின்றது.

2007-ல் றோயல் கனடியன் மின்ரினால் வெளியிடப்பட்ட இந்நாணயம் அதன் 999.99/1000 தங்க தூய்மை காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் 2007-ல் இடம்பெற்றது.

இந்த நாணயம் றோயல் கனடிய மின்ரிற்கும் சொந்தமானதல்ல என தெரிவித்த மின்ட் பேச்சாளர் அலெக்ஸ் றீவ்ஸ்சொ,ந்த காரர் யார் என்பதும் தெரியாதென தெரிவித்தார்.

இதன் பார்வை மதிப்பு 1-மில்லியன் டொலர்கள் ஆனால் எடையளவில் சந்தை விலை கிட்டத்தட்ட 4.5யு.எஸ். டொலர்கள் பெறுமதியானதெனவும் தெரிவித்துள்ளார்.

10-வருடங்களிற்கு முன்னர் 5-நாணயங்கள் உருவாக்கப்பட்டன. திருடப்பட்டது ஐந்தில் ஒன்றாகும்.

திங்கள்கிழமை அதிகாலை 3.30மணியளவில் திருடர்கள் யன்னல் ஒன்றின் ஊடாக நுழைந்து நாணயம் வைக்கப்பட்டிருந்த கபினெட்டை உடைத்து திருடிக்கொண்டு பொலிசார் வருவதற்கு முன்னதாக தப்பி சென்றுவிட்டனர் என மியுசியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

coin2coin4coin3

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News