அங்கத்துவர்களை இணைத்தவர்கள் யார்? தலைமை வேட்பாளர்கள் கேள்வி! சூடுபிடிக்கிறது கனடிய விவகாரம்! தமிழர்களிற்கு பாராட்டு!!
இரண்டு இணைய முகவரிகளிலிருந்து பலரும் இணைக்கப்பட்ட விவகாரம் பற்றிய விடயத்தை கட்சி வெளியிட வேண்டுமென பிரதான தலைமை வேட்பாளர்களான லிசா றீற் மற்றும் மக்சிம் பேணியர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழர்கள் மீது குற்றஞ்சாட்ட முயன்ற ஒரு முயற்சியை தமிழர்கள் மிகவும் அவதானமாகக் கையாண்டு, தாங்கள் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் திணிக்கப்படும் விதத்தை வியப்புடன் அனைத்து தலைமை வேட்பாளர்களும் அவதானித்து தமிழர்களிற்கு பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.
ஆறு சீக்கியர்கள் தாமாகவே முன்வந்து சத்தியப்பிரமாணம் மூலம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் தணிக்கப்பட்டிருந்தாலும்,
கண்சவேட்டிவ் கட்சி சுமார் 1,351 அங்கத்துவங்களை நிராகரித்ததோடு, இரண்டு இணைய முகவரிகளிலிருந்தே பல அங்கத்துவங்கள் சேர்க்கப்பட்டதான செய்தியையும் வெளிக் கொணர்ந்தது.
இதையடுத்து சத்தியப்பிரமாண அடிப்படையில் தகவல் வழங்கிய சீக்கிய இனத்தவர்கள் அறுவர் தங்களை கெவின் ஓலறி அவர்களின் ஆதரவு திரட்டுபவர்களே இவ்வாறு இணைத்ததான விடயத்தை வெளிக் கொணர்ந்திருந்தனர்.
இந்த விவகாரத்தைத் திட்டமிட்டுச் செய்தவர்கள் முன்னணியிலுள்ள வேட்பாளர் மக்சிம் பேணியர் அவர்களின் தலைமைக்காக பணியாற்றும் தமிழர்களை குற்றஞ்சாட்ட முயன்ற போதும், கட்சி தெரிவித்த இரண்டு இணையங்கள் தொடர்பான விவகாரம், சீக்கியர்களின் சத்தியப்பிரமாணம் என்பன அதை இல்லாது செய்தன.
இப்போது மக்சிம் பேணியர் அவர்களே மேற்படி அங்கத்துவர்களை இணைத்தவர்கள் யார் என்பதை கட்சி தெரிவிக்க வேண்டுமெனவும், அவ்வாறு செய்தவர் தலைவரிற்கான தேர்தலில் இருந்து விலக வேண்டுமெனக் கோரியுள்ளார்.
இதேபோன்றதொரு கோரிக்கையை இன்னொரு வேட்பாளரான திருமதி லிசா றெய்ரும் விடுத்துள்ளார். அங்கத்துவர்களை இணைத்தவர்கள் யாரென்பதை கட்சி தெரிவிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.
இந்தக் கனடிய கண்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ வேட்பாளரிற்கான தேர்தலில் வீட்டில் இருந்த படியே தபால் மூலம் வாக்களிக்கலாம். அதற்காக கட்சியில் இணைவது முக்கியமானதொரு விடயமாகும்.
தமிழர்கள் கனடிய அரசியல் வரலாற்றில் முக்கிய பிரசண்ணமாகவும் மிகவும் காத்திரமான சமூகமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையில், உங்களிற்கு கண்சவேட்டிவ் கட்சியின் கொள்கைகள் பிடித்திருந்தால் நீங்கள் 15 டொலர்களைச் செலுத்தி அங்கத்துவராகுவதன் மூலம் உங்களிற்கு விருப்பமான தலைவரை நீங்கள் தெரிவு செய்யலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தையும் உங்கள் விண்ணப்பதிலேயே இணைக்கலாம்.
நீங்கள் 13 வயதிற்கு மேற்பட்டவராகவும், கனடியப் பிரஜையாகவோ அல்லது கனடிய வதிவுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழேயுள்ள இணையத்திற்கு சென்று உங்கள் அங்கத்துவத்தை செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 28ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முதல் பூர்த்தி செய்து இணைவது தான். அதன் பிறகு வாக்களிப்பதற்கான சீட்டும் அதனை அனுப்புவதற்கான தபாலுறையும் உங்களை வந்து சேரும்.
அங்கத்துவராகுவதற்கு: Conservative Party membership