கனடியத் தமிழ்க் காங்கிரஸைப் போல வழக்கில் வெற்றிபெற்ற கனடிய முஸ்லீம் காங்கிரஸ்!
கனடிய முஸ்லீம் காங்கிரஸ் குறித்து தான் தெரிவித்த கருத்துப் பிழையானதென முன்னைநாள் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என நேற்று கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னைநாள் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் அவர்கள் தனது பதவிக்காலத்தில் மத்திய கிழக்கிற்கான பயணத்தின் போது சர்ச்சைக்குரிய யூத மதகுரு ஒருவரை அழைத்துச் சென்றார். அதனை முஸ்லீம் காங்கிரஸ் கண்டிருந்திருந்தது.
இதற்குப் பதிலளித்த செய்தித் தொடர்பாளர் கனடிய முஸ்லீம் காங்கிரஸ் பயங்கரவாதத்திற்கான பணச்சேர்ப்பில் ஈடுபடுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த முஸ்லீம் காங்கிரஸினருடன் ஏற்பட்ட உடண்பாட்டின் படியே மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இதேபோல 2011ம் ஆண்டில் சிங்களப் பேராசிரியரான றொகான் குணவர்த்தனா கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி அமைப்பாக கனடாவில் செயற்பட்டு வருகின்றது என்ற கருத்தைத் தெரிவித்திருந்தாh.
இதனை மறுத்து, தாங்கள் அவ்வாறு எப்போதுமே இருந்ததில்லை என்பதையும் இது உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதையும் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்தனர். இதன் பிரதிவாதியான றொகன் குணவர்த்தானவிற்கு வழக்கின் பிரதி அனுப்பப்பட்ட போதும்,
அவர் அந்த வழக்கில் தனது பக்க நியாயங்களையோ, ஆதாரங்களையோ நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கவில்லை, அதேபோல அவர் சார்பாக ஆஜராகுவதற்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கவில்லை.
இந் நிலையில் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் வாதங்களை மாத்திரம் கேட்ட நீதிபதி 37 ஆயிரம் டொலர்களை நஸ்டஈடாகவும், 16 ஆயிரம் டொலர்களை வழக்கிற்கான செலவாகவும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகவோ அல்லது அவர்களிற்காகச் செயற்படும் அமைப்பாகவோ கனடாவில் கனடியத் தமிழ்க்காங்கிரஸ் எப்போதும் இருந்ததில்லை என்ற தீர்ப்பு அதன் அங்கத்தவர்களிற்கும், ஆதரவாளர்களிற்கும் பெரும் ஆறதலாக அமைந்துள்ளது என அதன் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கனடிய முஸ்லீம் காங்கிரஸால் தொடுக்கப்பட்ட வழக்கு என்பது அரசாங்கத்தில் அங்கமாக இருந்து கொண்டு பிரதமர் சார்பாக கருத்துக்கூறவல்லவராக இருந்து கொண்டு மேற்படி நபர் கருத்துக்கூறியது தொடர்பானதாகும்.
ஏனினும் நேற்றைய தினம் வெளிவந்த இந்தச் செய்தியானது முஸ்லீம் மக்களிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவும், 2015ம் ஆண்டு ஒக்டோபர் வரை ஆட்சியிலிருந்த கண்சவேட்டிவ் அரச கட்டமைப்பின் முஸ்லீம்களிற்கு எதிரான பிரதிமத்தை வென்று விட்டோம் என்பதையும் தெரிவிப்பதாக இருந்தது.
கனடிய சட்டதிட்டங்களிற்கு அமைய பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் வருடாந்த சமர்ப்பிப்பு அரசிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதும், இயக்குனர்சபையின் கூட்ட அறிக்கைகள் பாதுகாத்து வைத்திருக்கப்படுவதும் இவ்வாறான விடயங்களில் ஆதாரசாட்சியாக இருப்பதுடன்,
ஆய்வு செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கைiயும், வருடாந்த அறிக்கையும் வருடாவருடம் மக்களின் பார்வைக்கு விடுவதே, குறிப்பாக அவர்கள் இணையத்தில் பதிவிடுவது, போன்ற செயற்பாடுகள் சிறந்த இயக்குனரவை வழிகாட்டல்களை கொண்ட அமைப்பு என்பதை நிரூபிக்க உதவும்.