வாடகை டாக்சி டெபிட் அட்டை மோசடி!ரொறொன்ரோ பொலிசாரின் எச்சரிக்கை!
ரொறொன்ரோ பொலிசார் வாடகை கார்களில் இடம்பெறும் டெபிட்அட்டை மோசடி குறித்து பொதுமக்களை எச்சரிக்கின்றனர்.
வாடகை கார் ஓட்டுபவர் வாடிக்கையாளரின் டெபிட் அட்டையை அதே வங்கியில் உள்ள வேறொருவரினதுடன் மாற்றிய பல சம்பவங்கள் வெளிப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளரும் சாரதியும் கட்டண இயந்திரத்தை முன்னும் பின்னும் கடந்து செல்கையில் இவ்வாறு நடக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாரதி அட்டை மற்றும் PIN-ஐ பெறக்கூடியதாக இருக்கின்றதென கூறப்படுகின்றது.
விசேடமாக குறைந்த வெளிச்சத்தில் இவ்வாறு செய்வது இலகு என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடப்பதாகவும் இந்த மோசடி குறிப்பிட்ட ஒரு டாக்சி நிறுவனத்துடன் நின்று விடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.