கனடாவின் 2017வரவு செலவு திட்ட சிறப்பம்சங்கள்!
ஒட்டாவா-லிபரல் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் புதன்கிழமை நிதி அமைச்சர் பில் மொன்ரோவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 23பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் 25.1பில்லியன் டொலர்களிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
—வேலை வாய்ப்பு காப்பீட்டு பரிமியம் ஒவ்வொரு 100 டொலர்களிற்கும் ஐந்து சதங்கள் அதிகரித்து டொலர்கள் 1.68ற்கு செல்கின்றது. இது ஊழியர் காப்புறுதி சட்டத்தின் கீழ் அதிகபட்ச அனுமதிக்கத்தக்க அதிகரிப்பு ஆகும்.
—-71வருட பழைமை வாய்ந்த கனடா சேமிப்பு பொன்ட் திட்டம்-1946ல் முதன் முதல் நிர்ணயிக்கப்பட்டது- புதன்கிழமை வரவு செலவு திட்டம் இதனை நீக்குகின்றது.
—மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களிற்கு அதிக வரி. ஒரு பெட்டி சிகரெட்டுகளின் சுங்க வரி டொலர்கள் 21.03லிருந்து டொலர்கள் 21.56ஆக அதிகரிக்கின்றது. மதுபான வரி இரண்டு சதங்கள் அதிகாரிக்கின்றது. இரண்டும் அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1ந்திகதி அதிகரிக்கப்படவுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக கொண்டு சரிசெய்யப்படவுள்ளது.
—பொது போக்குவரத்து வரிக்கடன்-போக்கு வரத்து சீட்டுக்களிற்கான செலவிற்காக கழிக்கப்பட்ட-யூலை 1லிருந்து அகற்றப்படும்.
—நகரங்கள் மற்றும் மாகாணங்களில் மலிவு விலை வீடுகளிற்காக அடுத்த 10ஆண்டுகளிற்கு 11.2பில்லியன் டொலர்களை புதிய பட்ஜெட் அனுமதிக்கின்றது. அரசாங்கத்தின் இரண்டாவது உள்கட்ட திட்டம் வீடு வழங்குநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
—மேம்பட்ட உற்பத்தி விவசாய-உணவு சுத்தமான தொழில் நுட்பம் டிஜிட்டல் கைததொழில்கள் சுகாதார உயிர் அறிவியல் மற்றும் சுத்தமான வளங்கள் ஆகிய ஆறு துறைகளின் உயர் தொழில் நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு திறன்கள் மற்றும் கண்டு பிடிப்பு திட்டத்தை ஏற்படுத்தல்.
— வரி ஏய்ப்பு மற்றும் வரி பரிமாணத்தை மேம்படுத்த அடுத்த ஐந்து வருடங்களிற்கு 523.9மில்லியன் டொலர்களை செலவிடல்-தணிக்கையாளர்கள் உட்பட்ட புலனாய்வு முயற்சிகள் போன்றனவற்றிற்கு.
–கனடிய குடும்பத்தினர்களிற்கு அடுத்த 10-வருடங்களிற்கு கனடா முழுவதிலும் 40,000 புதிய மானியமளிக்கப்பட்ட தினப்பராமரிப்பு திட்டங்களை ஏற்படுத்தல், கர்ப்பினிப் பெண்களின் பெற்றோர்களிற்குரிய விடுமுறை காலத்தை அதிகரித்து அவர்களின் உரிய திகதிக்கு 12 வாரங்களிற்கு முன்னர் கர்ப்பினி தாய்மார்கள் மகப்பேற்று அனுகூலங்களை பெற அனுமதித்தல் போன்றனவற்றிற்கு 7பில்லியன் டொலர்களை செலவழித்தல்.
–அனுபவம் பெற, மற்றும் தங்கள் திறமைகளை மேம்படுத்த அனுபவம் பெற, வர்த்தகம் ஆரம்பிக்க அல்லது வேலை சம்பந்த பட்ட அறிவுரைகளை பெறுவதற்கு மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் தொழிலாளர் சந்தை பரிமாற்ற ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக அடுத்த ஆறுவருடங்களில்2.7பில்லியன் டொலர்கள் செலவிடப்படும்.
—மூன்று வருடங்களிற்கு இளைஞர் வேலை வாய்ப்பு மூலோபாயத்திற்கு 395.5மில்லியன் டொலர்கள்.
–துணிகர முதலீட்டு முன்முயற்சி ஊக்கியாக கனடா வணிக மேம்பாட்டு வங்கியூடாக கனடிய தொழில் முனைவோர்களிற்கு கிடைக்க கூடியதாக 400மில்லியன் டொலர்கள் அடுத்த மூன்று வருடங்களிற்கு.
—-2018-19ஆரம்பத்தில் மாணவர் கடன்கள் மற்றும் மானியங்கள் பகுதி-நேர மாணவர்களிற்கு மிக எளிதாக கிடைக்க கூடியதாக அடுத்த நான்கு ஆண்டுகளிற்கு 59.8மில்லியன் டொலர்களும் அதே நேரம் சார்ந்த குழந்தைகளுடனான மாணவர்களிற்கு உதவ 107.4மில்லின் டொலர்கள்.
—வயதான-மாணவர்கள் மாணவர் கடன் மற்றும் மானியம் போன்றவற்றை அணுக எளிதாக்கும் ஒரு முன்னோடி திட்டத்திற்காக 2018-19ல் டொலர்கள் 287.2மில்லியன் அடுத்த மூன்று வருடகாலங்களிற்கு.
–திறன்கள் வளர்ச்சி மற்றும் அளவீட்டிற்கு ஆதரவாக அமையும் ஒரு புதிய அமைப்பிற்கு 225மில்லியன் டொலர்கள்.
—மூன்று வருடங்களிற்கு இளைஞர் வேலை வாய்ப்பு மூலோபாயத்திற்கு 395.5மில்லியன் டொலர்கள்.