போர்க்குற்ற விசாரணையையும், நல்லிணக்கப் பொறிமுறையையும் ஒன்றாக முன்னெடுக்கமுடியாது : நீதியமைச்சர்
போர்க்குற்ற விசாரணையையும், நல்லிணக்கப் பொறிமுறையையும் ஒரே தடவையில்முன்னெடுக்கமுடியாது, என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது தமிழ்-சிங்கள மக்களிடையே விரிசலை மட்டும் ஏற்படுத்தாது, மீண்டும் ஒருயுத்தத்துக்குக் கூட வழியமைத்துவிடும் என்று நீதியமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,புதியதொரு அரசமைப்பை உருவாக்கி நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு அரசு தயாராகிவரும் நிலையிலும் அது குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிரவே அரசு தயாராக இருக்கின்றது.
பௌத்தமதத்துக்குள்ள முன்னுரிமையும் அப்படியே தான் இருக்கும்.இந்நிலையில், விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறும், நல்லிணக்கத்தைஎற்படுத்துமாறு அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.
நல்லிணக்கம், போர்க்குற்ற விசாரணை என்பது ரயில் தண்டவாளம் போன்றது.
ரயில்பாதையின் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் எப்படி ஒன்று சேராதோ,அதுபோல்தான் போர்க்குற்ற விசாரணையையும், நல்லிணக்கத்தையும் ஒன்று சேர்க்கமுடியாது.
அதையும் மீறி, இவர்தான் அதைச்செய்தார், இதுதான் போர்க்குற்றம் என சாட்சியங்கள் வழங்கப்பட்டால் அது நாட்டுக்காக இத்தனை ஆண்டுகளாகப் போராடிய இராணுவத்தினருக்குகவலையையும், கலங்கத்தையும் தான் ஏற்படுத்தும்.
மேலும், சிங்கள, தமிழ் மக்களிடையே விரிசல் ஏற்படுவதோடு, மீண்டுமொருபோருக்குகூட அது வழியமைத்து விடும் ஆபத்து காணப்படுகின்றது.எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை காக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது.
இதுவிடயத்தில் சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கமுடியாது. அரசுக்கு இல்லாத அக்கறையா அனைத்துலக சமூகத்துக்கு இருக்கப்போகின்றது? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார்.