வாழ்வா சாவா போட்டியில் நான்கு நாடுகள்: தோற்றால் நழுவும் வாய்ப்பு…!
2019 ஆம் ஆண்டு உலககிண்ண போட்டிக்கு தகுதி பெற வாழ்வா? சாவா? போட்டியாக இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கிடையிலான போட்டி மாறியுள்ளது.
அந்தவகையில் இந்த இரு அணிகளுக்கிடையிலான போட்டியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
குறித்த போட்டியில் வெற்றி பெரும் அணியானது 2019 ஆம் ஆண்டு உலககிண்ண போட்டிக்கு இலகுவாக தகுதியை பெற்றுக்கொள்வதோடு, ஐ.சி.சி. தரப்படுத்தலில் முன்னேற்றம் ஏற்படும்.
தற்போது இலங்கை அணியானது தரப்படுத்தலில் 98 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது, வங்கதேச அணியானது 91 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது.
குறித்த 3 போட்டிகளிலும் இலங்கை அணியானது வங்கதேசத்தை வைட் வோஸ் செய்து தொடரை கைப்பற்றும் நிலையில் 100 புள்ளிகளை இலங்கை அணி பெற்றுக்கொள்ளும், அதேவேளை வங்கதேச அணி வெற்றிபெறும் இடத்தில் இலங்கைக்கு 96 புள்ளிகளுடன் தரவரிசையில் பின்னோக்கி செல்லக்கூடும்.
அவ்வாறு 1-2 என்ற அடிப்படியில் வெற்றி பெறும் இடத்தில் 99 புள்ளிகளும், 2-1 என்று தொடரை இழக்கும் சந்தர்ப்பத்தில் 97 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும்.
அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டியை பொறுத்து இந்த நிலை தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.