ஸ்காபுரோ உணவகம் ஒன்றில் கார்பன் மொனொக்சைட் கசிவினால் 18பேர்கள் வைத்தியசாலையில்?
ரொறொன்ரோ-ஸ்காபுரோ எக்லிங்ரன் அவெனியு கிழக்கு மற்றும் பேர்ச்மவுன் வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான மன்டரின் உணவகத்தில் புதன்கிழமை கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணியளவில் திடீரென சிலர் மூச்சு விட திணறியுள்ளனர்.
கொடிய மணமற்ற எரிவாயு உணவகத்தின் பின்புறத்தில் இருந்து வந்துள்ளதாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் சிலர் குறைந்த-அளவிலான கார்பன் மொனொக்சைட் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
18-பேர்கள் அனைவரும் மன்டரின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
உணவகமும் அருகாமையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களும் வெளியேற்றம் செய்யப்பட்டது.
கசிவிற்கான காரணம் தெரியவரவில்லை. விசாரனை தொடர்கின்றது.
மறு அறிவித்தல் வரை உணவகம் மூடப்பட்டது.